தலவரலாறு கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியான வெள்ளியங்கிரி மலைகளின் ஏழாவது மலையில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 6000 அடி உயரத்தில் அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் சுயம்புவாய் எழுந்தருளி இருக்கின்றார். இம்மலை ஏழு சிகரங்களைக் கொண்டுள்ளது. ஐந்தரை கிலோ மீட்டர் தூரம் செல்லும் இப்பாதையில் வெள்ளை விநாயகர்கோயில் பாம்பாட்டி சுனை கைதட்டி சுனை சீதைவனம் அர்ச்சுனன்வில் பீமன்களி உருண்டை ஆண்டிசுனை போன்ற இடங்களை கண்டு மகிழ்ந்து செல்லலாம். தென்னகத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த புண்ணியத் […]
பெரிய சிவாலயங்களில் ஐந்து வகையான நந்திகள்
இந்திர நந்தி, வேத நந்தி (பிரம்ம நந்தி), ஆத்ம நந்தி (கொடி மரத்தின் அருகில் உள்ளது), மால்விடை (மகாமண்டபத்தில் இருப்பது), தரும நந்தி என்பவையாகும் இந்திர நந்தி : ஒரு சமயம் இந்திரன் இடப (காளை) வடிவம் கொண்டு சிவபெருமானைத் தாங்கினான். போகங்களின் அதிபதியாகிய, இந்திரன் வடிவாக விளங்கும் இந்த ‘நந்தியைப் போகநந்தி” என்றும், ‘இந்திர நந்தி” என்றும் அழைக்கின்றனர். இந்த நந்தியைக் கோயிலுக்கு வெளியே சற்று தொலைவில் கருவறையை நோக்கியவாறு அமைக்கின்றனர். வேத நந்தி : […]
நீலமேகப் பெருமாள் (மாமணி) திருக்கோவில், தஞ்சாவூர்
மூலவர் – நீலமேகர், வீரநரசிம்மர், மணிக்குன்றர் உற்சவர் – நாராயணர் தாயார் – செங்கமலவல்லி, தஞ்சைநாயகி, அம்புஜவல்லி தல விருக்ஷம் – மகிழம் புராணப் பெயர் – தஞ்சமாபுரி, வெண்ணாற்றங்கரை மங்களாசாசனம் – பூதத்தாழ்வார், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார் சிறப்பு – திவ்ய தேசங்களுள் ஒன்று. சோழர்களால் கட்டப்பட்டது. இறைவன் அமர்ந்தகோலம். பஞ்ச நரசிம்மர்கள்:சிங்கப் பெருமாள் கோவிலில் வீரநரசிம்மர்; முன் மண்டபத்தில் யோக நரசிம்மர்; நீலமேகப் பெருமாள் கோவில் பிரகாரத்தில் லக்ஷ்மி நரசிம்மர்; கருடாழ்வார் விமானத்தில் அபயவரத […]
ஸ்ரீ நரசிம்ஹர் ஸ்துதி
ஸம்ஸார-ஸாகர விஸால கரால காலநக்ரக்ரஹ-க்-ரஸந நிக்ரஹ விக்ரஹஸ்யவ்யக்ரஸ்ய ராக நிசயோர்மி-நிபீடிதஸ்யலக்ஷ்மி நரஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் … !!! பொருள் வாழ்க்கை என்னும் கடலில் பரந்த அச்சுறுத்திம் காலமென்னும் முதலைகளால் பிடிக்கப்பட்டு மறையும் உடலை உடையவனும், பலவிதமான கவலை உள்ளவனும், ஆசைகள் என்னும் அலைகளால் அலைக்கழிக்கப்படுபவனுமான எனக்கு லக்ஷ்மியுடன் கூடிய நரஸிம்ஹனே!, நீயே கை கொடுத்து அருள வேண்டும்.✋🔔🏛
பொன்மலை வேலாயுதசுவாமி திருக்கோயில்
கோவை மாநகரின் தென்திசையில் உள்ள கிணத்துக்கடவு எனும் ஊரில் அமைந்துள்ள ஒரு சிறிய குன்று, ‘பொன்மலை’. இம்மலையில் முருகனின் திருப்பாதங்கள் பதிந்துள்ளன. பண்டைக்காலத்தில் இம்மலையில் சந்தன மரங்கள் வளர்ந்திருந்ததாக அறியப்படுகிறது. இம்மலையில் பொன் விளைந்ததாலேயே பொன்மலை எனப் பெயர் பெற்றது. கொங்கு மண்டல சிற்றரசர் பரம்பரையில் வந்த கோப்பண மன்றாடியார், ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழாவிற்கு பழநி சென்று தண்டாயுதபாணி சுவாமியை தரிசித்து வருவார். அவர் கனவில் பழநி ஆண்டவர் தோன்றி, ‘வடக்கே செல்லும் பாதையில் ஒரு குன்று […]
அம்மனின் 51 சக்தி பீடம்
அனைத்து மாநிலங்களிலும் அம்மனின் சக்தி பீடங்கள் உள்ளன. இன்று எந்த மாநிலத்தில் எந்த அம்மனின் சக்தி பீடம் உள்ளது என்று பார்க்கலாம். 1. காமாட்சி-காஞ்சீபுரம் (காமகோடி பீடம்), தமிழ்நாடு 2. மீனாட்சி-மதுரை (மந்திரிணி பீடம்), தமிழ்நாடு 3. மூகாம்பிகை-கொல்லூர் (அர்த்தநாரி பீடம்), கர்நாடகா 4. விசாலாட்சி-காசி (மணிகர்ணிகா பீடம்), உத்தரபிரதேசம். 5. சங்கரி-மகாகாளம் (மகோத்பலா பீடம்), மத்திய பிரதேசம். 6. பர்வதவர்த்தினி-ராமேஸ்வரம் (சேது பீடம்), தமிழ்நாடு 7. அகிலாண்டேஸ்வரி-திருவானைக்கா (ஞானபீடம்), தமிழ்நாடு 8. அபீதகுஜாம்பாள்-திருவண்ணாமலை (அருணை பீடம்), […]