
“ஓம் உந்நித்ரியை வித்மஹே
ஸுந்தப ப்ரியாயை தீமஹி
தந்நோ மீனாதேவீ ப்ரசோதயாத்:“
காசியில் இறந்தால் முக்தி திருவண்ணாமலையில் வாழ்ந்தால் முக்தி .மதுரை வீதியில் நடந்தாலே முக்தி .அந்த மதுரை மீனாட்சியைப்
பற்றி கேட்டாலோ ,அவள் புகழை சொன்னாலோ நமக்கு நன்மை நிச்சயம் . மீன் போன்ற கண்களை உடையவள் என்பதால் மீனாட்ஷி என பெயர் பெற்றாள் அன்னையின் கடைக்கண் பார்வை
பட்டாலே சகல செளபாக்கியம் நம்மை வந்து சேரும்.மீனாக்ஷி அம்மன் விக்கிரகம் மரகதக் கல்லால் ஆனது .அம்மனுக்கு மரகத வல்லி ,தடாதகை ,அங்கையற்கண்ணி,சுந்தர வல்லி
என்றெல்லாம் அழைக்கப்படுவது இந்த அன்னை மீனாட்சியே! .அன்னை மீனாட்சியே கதி!
அத்துவித ஆனந்த அனுபவ இடையீடு
முதலாம் பாடல்
திருத்தகுபொன்னம்பலத்தே
திருநடஞ்செய் தருளும்
திருத்தகுபொன்னம்பலத்தே
திருநடஞ்செய்தருளும்
திருவடிகள் அடிச்சிறியேன்
சென்னிமிசை வருமோ
உருத்தகுநா னிலத்திடைநீள்
மலத்தடைபோய் ஞான
உருப்படிவம் அடைவேனோ
ஒன்றிரண்டென் னாத
பொருத்தமுறு சுத்தசிவா
ஆனந்தவெள்ளம் ததும்பிப்
பொங்கிஅகம் வெள்ளத்தே
நான்மூழ்கி நான்போய்
அதுவாகப் பெறுவேனோ
அறிந்திலன்மேல் விளைவே .