- கோயிலுக்கு முன்பு பங்குனி ஆற்றங்கரையில் கயா பல்குனி ருத்ர சித்தர் சன்னதி உள்ளது.
- இங்கு ஒவ்வொரு அமாவாசை தினத்தன்று ஹோமம் நடைபெறுகிறது.
- பிதுர் ஹோமம் நடத்துதல் அரிய பலன்கள் கிடைக்கும் என்பது
ஐதீகம். மேலும் பிதுர்க்களே இத்தலத்திற்கு நேரில் வந்து அர்க்யங்களை, வேள்வி ஆஹுதிகளை ஏற்று ஆசிர்வதிக்கும் அற்புத சக்தியை கொண்ட தலம் இது. இதனால்தான் இத்தலம் பக்தர்களால் தென்னிந்திய கயா என்று அழைக்கப்படுகிறது.

- இதுவரை வாழ்வில் முன்னோர்களுக்கு தர்ப்பணம், படையல், பூஜைகளை முறையாக செய்யாதவர்கள் இங்கு வந்து கயா பல்குனி ருத்ர சித்தர் சன்னிதியில் பித்ரு ஹோமங்களை தொடர்ந்து அமாவாசை தோறும் நடத்தி வர வேண்டும், வசதி இல்லாதவர்கள் தலத்திற்கு வந்து கோயிலை தூய்மை படுத்தும் உழவார் திருப்பணிகளில் பலருடன் சேர்ந்து செய்தால், பிதுர் ஹோமம் நடத்திய பலன்
கிடைக்கும் என்பதும் ஐதீகம்.

- இதற்கு பிராயச்சித்தமாய் பங்குனி
ஆற்றங்கரையை தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட உடல் சுத்தி, உள்ள சுத்தி,புத்தி சுத்தி, மன சுத்தி, அறிவு சுத்தி ஆகிய ஐந்து சுத்திகளும் கிடைக்கும். வில்வமரத்தை ஸ்தல மரமாக கொண்ட இத்தலத்தில் தினமும் திருக்கோயில்
அன்னதான திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

-
முறையற்ற வகைகளில் காமத் தீயசெயல்களுக்கு
ஆட்பட்டோர் தமது தீயச் செயல்களுக்கு வருந்தி உண்மையை சரியென திருந்தி சீர்மையாய் வாழ்ந்திட இத்தலத்தில் உள்ள கயா பல்குனி ருத்ர சித்தர் சன்னதியில் வைராக்யம், சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். காமச் தீயச்செயல்கள் மிகவும் அறுவறுப்பானவை.
இருப்பிடம் :
- திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து 23 கி.மீ தொலைவிலும், லால்குடியில் இருந்து 3 கி.மீ தொலைவிலும் இக்கோயில் உள்ளது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் லால்குடி பஸ் ஸ்டாண்டில் இருந்து அடிக்கடி பஸ் வசதி
உள்ளது