நமது வீட்டில் தீராத பணக்கஷ்டமோ, மனக்கஷ்டமோ ஏற்பட்டிருந்தால் அதை சரி செய்ய கீழ்கண்ட எளிய பரிகாரத்தை செய்தால் பலன் பாருங்கள் .
வேதசாஸ்திரம் கீழ்கண்ட அஷ்டமங்கலப் பொருட்களில் மகாலட்சுமி கொலுவிருப்பதாக
கூறுகிறது.
1. குண்டு மஞ்சள்-3, 2. குங்குமம், 3. மரச்சீப்பு, 4. தர்ப்பணம் என்ற கண்ணாடி, 5. சந்தனம், 6. தாம்பூலம், 7. தீபம், 8. ரவிக்கைத்துணி பச்சை நிறம்

மேற்க்கண்ட அஷ்டமங்கலப் பொருட்களை ஒரு கண்ணாடிபாட்டிலில் மிட்டாய் டின் போன்ற சீசாவில் போட வேண்டும்.
ஒரு தட்டின் நடுவில் அஷ்டமங்கலப் பொருட்கள் அடங்கிய பாட்டிலை வைத்து பாட்டிலின் இரண்டு பக்கங்களிலும் கமலதீபங்களை கமல தீபம் எனப்படும் ஐஸ்வர்ய தீபத்தின் வடிவம் வித்யாசமாக இருக்கும்.வரி வடிவங்களோடு கூடிய அடித்தட்டு ஒரு குளம் போலக் காட்சி அளிக்கும். அதில் தாமரை மலர்ந்திருப்பது போல நடுத்தண்டுடன் ஒரு குழாய் வடிவமும் அதன் நடுவில் திரியிட்டு எண்ணை விட்டு ஏற்ற வேண்டிய இடம் தீபத்தை இறைவனுக்குக் காட்ட சுட்டுவிரல் நுழையர மாதிரி வடிவம்.செங்குத்து நிலையில் தண்டு போல உள்ள தீபம் எண்ணையுடன் நமது கஷ்டங்களையும் உறிஞ்சி இறைவன் முன் நிறுத்தி அழிப்பவையே கமல தீபம் எனும் ஐஸ்வர்ய தீபம். கமல தீபம் ஏற்றி கீழ்க்கண்ட ஒன்பது திருமகள் நாமங்களான
1.ஓம் லட்சுமி நம
2.ஓம் ஸ்ரீதேவி நம
3.ஓம் கமலாசனி நம
4.ஓம் பத்ம பூஜனி நம
5.ஓம் மகாதேவி நம
6.ஓம் சங்கமாதா நம
7.ஓம் சக்ர மாதா நம
8.ஓம் கதா மாதா நம
9.ஓம் ஐஸ்வர்யை நம
என லட்சுமியின் திருநாமங்களை எட்டு தடவைகள் ஜெபிக்க வேண்டும்.பிறகு ஆத்ம பிரதட்சிணம் (தன்னையே சுற்றிக் கொள்ளுதல்) செய்து நமஸ்காரம் செய்ய வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பணக்கஷ்டம் தீரும். லட்சுமியின் அருட்பார்வை நம்மீதுபட்டு செல்வம் பெருகும்.
இவ்வாறு மகாலட்சுமியை மனமுருகி வழிபட்டால் கஷ்டங்கள் மறைந்து வளம் உண்டாகும்