- மூலவர் – நீலமேகர், வீரநரசிம்மர், மணிக்குன்றர்
- உற்சவர் – நாராயணர்
- தாயார் – செங்கமலவல்லி, தஞ்சைநாயகி, அம்புஜவல்லி
- தல விருக்ஷம் – மகிழம்
- புராணப் பெயர் – தஞ்சமாபுரி, வெண்ணாற்றங்கரை
- மங்களாசாசனம் – பூதத்தாழ்வார், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார்
- சிறப்பு – திவ்ய தேசங்களுள் ஒன்று. சோழர்களால் கட்டப்பட்டது. இறைவன் அமர்ந்தகோலம்.
- பஞ்ச நரசிம்மர்கள்:
சிங்கப் பெருமாள் கோவிலில் வீரநரசிம்மர்; முன் மண்டபத்தில் யோக நரசிம்மர்; நீலமேகப் பெருமாள் கோவில் பிரகாரத்தில் லக்ஷ்மி நரசிம்மர்; கருடாழ்வார் விமானத்தில் அபயவரத நரசிம்மர், தாயார் சன்னதியில் உள்ள தூணில் கம்பத்தடி யோக நரசிம்மர் காட்சி அளிக்கின்றனர். பிரதோஷ வேளையில் வீரநரசிம்மரை வழிபட்டால் வேண்டிக்கொண்ட செயல்கள் நிறைவேறும்.

- தலப்பெருமை
வீரநரசிம்மர் கோவிலில் சக்கரத்தில் மஹாவிஷ்ணுவே சக்கரத்தாழ்வாராக இருக்கிறார். வலப்புறத்தில் இருக்கும் யானையின்மீது கை வைத்துத் தடவுகிறார்; இடப்பக்கத்தில் ஒருவர் சுவாமியை வணங்குகிறார். யானை வடிவம் – தஞ்சகாசுரன் ஆவான். அவன் திருந்தி விஷ்ணுவை வணங்குகி
றான். பின்புறத்தில் நரசிம்மர் இருக்கிறார். அவருக்கு இருபுறமும் ஹிரண்யகசிபு, பிரஹலாதன் இருக்கின்றனர். - வலவந்தை நரசிம்மர்:
நரசிம்மரின் இடப்பக்கம் அமர்ந்திருக்கும் லக்ஷ்மி, நீலமேகப் பெருமாள் கோவில் ப்ரகாரத்தில் அவருக்கு வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். இவரை வலவந்தை நரசிம்மர் என்கின்றனர். அசுரனை அழித்த நரசிம்மர் கோபமாக இருக்கிறார். கோபம் இருக்கும் இடத்தில் லக்ஷ்மி வாசம் செய்யாமல் நரசிம்மருக்கு வலப்புறம் அமர்ந்துகொண்டாள். - அசுரர்களை அழித்த மகாவிஷ்ணு இங்கு நீலமேகர், மணிக்குன்றப் பெருமாள், வீர சரசிம்மர் என்று மூன்று வடிவங்களில் தனித்தனி கோவில்களில் அருள்கிறார்.

- தலவரலாறு
பராசர முனிவர் பாற்கடலில் கிடைத்த அமிர்தத்தை மணிமுக்தா நதியில் இட்டு அதன் கரயில் ஆசிரமம் அமைத்துத் தவம் செய்துவந்தார். அப்போது சிவனிடம் சாகா வரம் பெற்ற தஞ்சகன், தண்டகன், தாரசுரன் எனும் அசுரர்கள் அவரைத் தொந்தரவு செய்தனர். சிவன் மாயா சக்தியான காளியின்மூலம் அவர்களைக் கொன்றார். ஆனால் அவர்கள் மூவரும் அமிர்தம் கலந்திருந்த தீர்த்தத்தைப் பருகி மீண்டும் பராசரருக்குத் துன்பம் தந்தனர். மஹாவிஷ்ணுவிடம் முறையிட்டார் பராசரர். மஹாவிஷ்ணு, யானை வடிவம் எடுத்த தஞ்சகனை நரசிம்ம வடிவெடுத்து மடியில் கிடத்தினார். தஞ்சகனுக்கு ஞானம் பிறந்தது. அசுர குணங்கள் ஒழிந்து , நரசிம்மரிடம் அவ்விடத்திலேயே தங்கும்படி வேண்டினான். அவனது பெயராலேயே அத்தலமும் தஞ்சமாபுரி என்று அழைக்கப்படலாயிற்று. தண்டகாசுரன் பூமிக்குள் ஒளிந்துகொண்டான். வராஹ அவதாரம் எடுத்து விஷ்ணு அவனை அழித்தார். காளியை அனுப்பி தாரகனை வதம் செய்தார். மூன்று அசுரர்களும் அழிந்த பின் பராசரருக்கு நீலமேகப் பெருமாளாகக் காட்சி தந்தார்.