
வருகிற தை அமா வாசை (4.2.2019) அன்று எல்லா பஞ்சாங்கத்திலும் “மஹோதயம்” என்று குறிப்பிட்டுள்ளது.
மஹோதயம் என்றால் என்ன?
என்பதின் ஒரு சிறிய விளக்கம். உதயம் என்றால் காலையில் சூரியனின் உதயம் (தெரிந்தே). அன்று மஹத்தான என்கிறது சாஸ்திரம். மாகமாசத்தில் வரும் அமாவாசை அன்று திங்கள்கிழமையும், ச்ரவண நக்ஷத்ரமும், வ்தீபாத யோகமும், சதுஷ்பாத கரணமும் சேர்ந்த நாளில் சூர்யோதயத்துற்கு முன் சமுத்ரம், மஹாநதி, ஆறு, குளம் அல்லது கடைசி பக்கமாக கிணற்றிலோ சங்கல்பம் செய்து ஸ்நானம், வேதவித்துக்களுக்கு தானம், ஜபம், பூஜை, ஹோமம், பித்ரு தேவைகளுக்கு ஸ்ராத்தம் போன்ற கர்மங்கள் செய்வது அனந்தமான பலனைத் தரும் என்றும் அந்த நாள் கோடி சூர்ய க்ரஹணத்திற்கு சன்மானம் என்று ரிஷிகள் கூறியுள்ளார்.

ஆதரம்: ஸ்ம்ருதி முக்தாபலம் என்ற வைத்யநாத தீக்ஷிதீயத்தில்(ஸ்ரீ மடம் வெளியிட்டுள்ள புதிய பதிப்பு) ஸ்ராத்த காண்டம் பக்கம் 220