- புத்ர தார க்ருஹ க்ஷேத்ர ம்ருகத் த்ருணாம்பு புஷ்கலே
க்ருத்ய ஆக்ருத்ய விவேகாந்தம்
பரிப்ராந்தம் இதஸ்தத! ஐந்தாம் ஸ்லோகம் - இப்பிறப்பில் நமக்கு ஏற்படும் மக்கள் (குழந்தைகள்), இல்லாள்/இல்லான், வீடு, நிலம் முதலிய சொந்த பந்தங்கள் காடுகளில் காணப்படும் கானல் நீரைப் போன்று தொடர்ந்து நம்மை ஏமாற்றிக் கிடக்கும்.

- இந்த சொந்தங்களின் நலத்திற்கான ஒரே நோக்கில் எதைச் செய்தல் எதை விலக்குதல் என்ற ஞான விவேகங்கள் அற்று இங்கும் அங்கும் சுழன்று கொண்டே இருப்போம்.
- அருளிச் செயல் சொன்ன வண்ணம் ‘தாயே தந்தை என்றும், தாரமே கிளை மக்களென்றும்’ என்னும் வகையிலும்,
- தந்தை தாய் மக்களே சுற்றம் என்று உற்றவர் பற்றி நின்ற பந்தமார் வாழ்க்கை’பெற்றோர்
கள் கணவன்/ மனைவி, பிள்ளைகள் மட்டுமே நமக்குஉற்றவர்கள்
என்று எண்ணி, அவர்களுடன் அவர்களுக்காகவே நாட்களைக் கடத்தி அந்தப் பந்தங்களோடே மடிந்து போகும் மனிதர்கள் . - கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும்’ என்னும் படியாய் நம்முடைய கூடப் பிறந்தவர்கள், நாம் சேர்த்துக் கொண்டவர்களின் சொந்தங்களே நிஜம் என்றெண்ணி நாட்களைக் கடத்துவது கானல் நீரைக் கொண்டு தாகம். தணித்துக் கொள்வதற்கு சமம்.
- பூர்வர்கள் இந்த உறவினர்களை ஆபாச உறவினர்கள் என்று பேசினார்கள்.
- நம் ஆத்மாவின் உற்ற நிரந்தர உறவினன் எம்பெருமான் ஒருவனே என்று உணர்ந்திடும் சமயத்தில் தான் நாம் துக்கங்களிலிருந்து கரையேற முடியும் என்று நம்பிகள் விளிக்கிறார்.✋