
மயிலாடுதுறை – திருவாரூர் சாலையில், பூந்தோட்டத்துக்குக் கிழக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ளது மகா காளநாதர் கோயில்.
இறைவர் திருப்பெயர் : மகாகாளநாதர், மாகாளேசுவரர், காளகண்டேசுவரர்,
இறைவியார் திருப்பெயர் : பக்ஷயாம்பிகை, ராஜமாதங்கி்,
தல மரம் : கருங்காலி மரம் , மருதமரம்,
தீர்த்தம் : மாகாள தீர்த்தம்
அஷ்ட நாகங்களில் ஒன்றான வாசுகி என்ற நாகத்தின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய தலம் இதுவாகும். அஷ்டநாகங்களில் ஒன்றாகிய வாசுகி என்ற் நாகம் தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிக் கொள்ள இத்தலம் வந்து இறைவனை வழிபட்டு தனது தோஷம் நீங்கப் பெற்றது. நாகதோஷம், புத்திரதோஷம், திருமணத்தடை உள்ளவர்கள் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இராகு காலத்தில் வாசுகிக்கு பால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் நற்பலன்கள் அடையலாம்.
மதங்கரிஷி என்பவர் குழந்தை பாக்கியம் வேண்டி இங்கு பிரார்த்தனை செய்தார். அவருக்கு ‘ராஜமாதங்கி’ என்ற குழந்தை பிறந்தது. குழந்தை பெரியவளானதும், இறைவன் தோன்றி, வேண்டும் வரம் கேள் என்றார்”. அதற்கு அவள், நான் தங்களுடன் தினமும் திருமண கோலத்தில் இத்தலத்தில் இருக்க விரும்புகிறேன், ”என்றாள். திருமண தடையுள்ளவர்கள் அம்மனுக்கு இரண்டு அரளி மாலை சாத்தி அதில் ஒன்றை தங்கள் கழுத்தில் அணிந்து கொள்கிறார்கள்.
மாகாளம் என்ற பெயர் பெற்ற சிவஸ்தலங்கள் இந்தியாவில் மூன்று இடங்களில் இருக்கின்றன. அவை வட இந்தியாவிலுள்ள உஜ்ஜயனி மாகாளம், தொண்டை நாட்டுத் தலமான இரும்பை மாகாளம், மற்றும் காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றான அம்பர் மாகாளம் என்ற இத்தலம்.