மூச்சு தியானம் என்றால் மூச்சை ஒருநிலைப்படுத்துவது அல்ல. மூச்சை கவனிப்பது மட்டுமே. புத்தர் இதன் மூலமே ஞானம் அடைந்தார் என்று வரலாற்றில் கூறப்படுகிறது.
ஒருமுறை ஒரு திருடன் ஒருவன், “நான் தியானம் கற்றுக் கொள்ள ஆவலுடன் இருக்கிறேன். ஆனால் நான் ஒரு திருடன் நான் என்ன செய்வது? என்னால் திருடாமல் இருக்க முடியவில்லை” என்று கூறினான். அதற்கு புத்தர்,” நீ எதற்காக கைவிடவேண்டும்?திருட்டுக்கும் தியானத்திற்கும் சம்பந்தமே இல்லையே என்று கூறினார். நீ எதையும் நிறுத்த வேண்டியதில்லை தாராளமாக உன் திருட்டை தொடரலாம்” என்றார். திருடன் மிகவும் குழம்பியும் அதிர்ச்சியடைந்து பார்த்தான் புத்தரை. புத்தர் அவனிடம்,” நீ எதை வேண்டுமானாலும் செய். ஆனால் உன்னுடைய மூச்சை கவனிப்பதை மட்டும் விட்டுவிடாதே. எந்த நிலையிலும் உன் மூச்சை கவனிப்பதை பார்த்துக்கொண்டே இரு”என்றார். அதற்கு அந்த திருடன்,” அட இது மிக எளிதாக இருக்கிறது. இது மிகவும் சுலபம்” என்றான். ” சரி. சென்று வா “என்றார் புத்தர்.
அந்த திருடன் அடுத்தநாளே புத்தரிடம் வந்தான். அவன் புத்தரிடம்,” நீங்கள் என்னை நன்றாக ஏமாற்றி விட்டீர்கள்” என்று குறை கூறினான். அதற்கு புத்தர் என்ன ஆயிற்று என்று கேட்டார். நான் நேற்று திருடுவதற்காக சென்றேன். திருடிக் கொண்டிருக்கும் போது மூச்சை கவனிக்க ஆரம்பித்தேன். என்னால் சரியாக திருட முடியவில்லை நான் திரும்பி வந்து விட்டேன். இப்பொழுது நான் என்ன செய்வது” என்று கேட்டான்.
புத்தர், “மூச்சை கவனிக்க கவனிக்க விழிப்பான நிலையில் இருக்கிறாய். அந்த விழிப்பு நிலையில் உன்னால் எந்த ஒரு தவறும் செய்ய இயலாது என்று அவனுக்கு விளக்கம் அளித்தார். இதுவே நான் உனக்கு அளிக்கும் தியானம்” என்று அவனை கூறி அனுப்பி வைத்தார்.
புத்தரும் இதே முறையை பயன்படுத்தி ஞானம் அடைந்தார் என்று வரலாறுகள் அனைத்தும் கூறுகின்றன. இந்த தியான முறையை பயிற்சி செய்து பாருங்கள். உங்கள் விழிப்பு நிலையை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்.
குறிப்பு:
மூச்சு வருவதையும் போவதையும் கவனிக்க வேண்டும். மூச்சு வருவதற்கும் போவதற்கும் இடையில் ஒரு நிலைப்படுத்தவேண்டும்