கால சர்ப்ப தோஷம்:
ஒருவரது ஜாதகத்தில் ராகு – கேது ஆகிய இருவரின் பிடிக்குள் எல்லா கிரகங்களும் நிலை கொள்ளும்போது, அதைக் கால சர்ப்ப தோஷம் என்கிறார்கள். அதுவே கடுமையான தோஷமும்கூட.
அது தவிர, ஐந்தாம் இடத்தில் ராகு அமர்ந்திருந்தால், அது புத்திர தோஷமாகக் கருதப்படுகிறது. ஏழாம் இடமாகிய களத்திர ஸ்தானத்தில் ராகு அமர்வது களத்திர தோஷம். ‘தோஷம் இருக்கிறவர்களுக்கு ஆயுட் காலத்தில் முற்பகுதியில் தோஷமும் சோதனையுமாக அமையும். வாழ்க்கையின் பிற்பகுதி நல்ல முன்னேற்றத்தைத் தருவதாக அமையும்’ என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. பரிகாரத் தலங்களுக்குச் சென்று இறைவனை வணங்கி, சோதனைகளை சமாளிக்கலாம்.