அர்த்த நாரி என்பவர் ஈஸ்வரனும் பார்வதியும் சேர்ந்த ஆண் பெண் கலந்த சமநிலை என்பது நமக்குத் தெரியும்.. இதன் உண்மையான பொருள் என்ன..??🏛
யோகத்தின் படி உடலில் ஏகப்பட்ட சக்தி வழிப்பாதைகள்..அதாவது நாடிகள் இருப்பது நாம் அறிந்ததே.. அதில் முக்கியமானவைகளாக சொல்லப் படுபவை மூன்று..
அவை இட . பிங்களை மற்றும் சுழு முனை நாடிகள்..

இட மற்றும் பிங்களை நாடிகள் முதுகெலும்பை பின்னி ஹெலிகலாக அமைந்துள்ளது .சுழுமுனை முதுகெலும்பின் நடுவே உட்பக்கமாக அமைந்துள்ளது..
இடகலை எனப்படும் நாடி.. பெண் சக்தியாக.. குளிர்ந்த நிலவாக உருவகிக்கப் படுகிறது.. தொடர்நது இடப் பக்கமாக வலது நாசியைஅடைத்துக் கொண்டு மூச்சு விடுபவர் உடல் குளிர்ந்துபோவது இதன் அடையாளம்..
இதே போல வலது பக்கமான பிங்கள நாடியை சூரியனுக்கும் (ஆண் தன்மைக்கும்) குறியீடாகச் சொல்கிறது யோகம்.. தொடர்ந்து இடது நாசியை அடைத்துக் கொண்டு வலது நாசியில் மூச்சு விடுபவர் உடல் சூடாவதின் குறியீடு இது..

ஒவ்வாரு மனிதனுக்கும் இட நாடும் பிங்கள நாடியும்.. அதாவது சூர்ய (ஆண்) கலையும் சந்திர(பெண்) கலையும் .. ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கு ஒருமுறை மாறி ஓடும்.. ஒரு சமயத்தில் ஒரு நாடியில் மட்டுமே மூச்சு சுவாசம் அதிகப் படியாக இருக்கும்..மற்றொன்று தாழ்ந்தே இருக்கும்…
எப்போது இடகலையும்.. பிங்களயும் சரிசமமாக ஓடுகிறதோ..(சரியான மூச்சுப் பயிற்சிகளால் இது முடியும்) அப்போது ப்ராண ஓட்டம்.. சுழுமுனை என்ற மூன்றாவது நடுநாடியில் பிரவேசிக்கும்..
சுழுமுனை என்பது.. முதுகுத் தண்டின் உள்ளே உள்ள centralis canalis எனப்படும் மிக மெல்லிய மயிரினும் மெல்லிய நரம்பின் உள்ளே நிகழும்.. இந்த வழியின் மூலமே மூளையில் இருந்து உடலிற்கான கட்டளைகளும் சக்தி பரிமாற்றங்களும் நடைபெறுகிறது.. இதற்குள்ளும் மூளையின் பருப் பொருளான க்ரே மேட்டரே நிரம்பி இருக்கிறது.

ஆகவே. இட மற்றும் பிங்களை சரியான சமநிலையில் இருக்கும் போது . ப்ராணன் இட மற்றும் பிங்களைக்கு நடுவே உள்ள சுழுமுனையில் ப்ரவேசிப்பதே..யோகத்திற்கான ..அதாவது குண்டலினி எழுச்சிக்கான சரியான யோக நிலை..!!
இதைக் குறிக்கும் யோகக் குறியீடே அர்த்தநாரிஸ்வரர்.