Simple Pariharam Information
  • About
  • Blog
    • Festivals
    • Temple Information
    • Manimaadam
    • General Information
    • இன்றைய ராசிப்பலன்
    • Viratham Information
  • Wallpaper
  • Gallery
    • MANIMAADAM
  • Videos
  • Contact
  • Login/Register
  • About
  • Blog
    • Festivals
    • Temple Information
    • Manimaadam
    • General Information
    • இன்றைய ராசிப்பலன்
    • Viratham Information
  • Wallpaper
  • Gallery
    • MANIMAADAM
  • Videos
  • Contact
  • Login/Register

அன்னை சாரதாதேவி தட்சிணேசுவரத்தில் கழித்த நாட்கள்

குருதேவர் பாடுவார்.நான் நகபத் வரந்தாவில் மறைத்திருந்த மூங்கில் தட்டியின் பின்னால் மணிக்கணக்கின் நின்று அதனை கண்டு மகிழ்வேன். அவரை கைகள்கூப்பி வணங்குவேன்.என்னவோர் ஆனந்தம்.மக்கள் இரவு பகலாக வருவார்கள்.இறைவனைப்பற்றி பேசுவார்கள்.

மனம் ஒரு மதயானை போன்றது.அதனால்தான் எல்லாவற்றையும் விவேகத்துடன் அணுகவேண்டும். உண்மை எது எண்மையற்றது எது என்பதை ஆராய்ந்து அறிய வேண்டும்.இறைவனைப்பெறுவதற்கு மிகுந்து பாடுபட வேண்டும்.

தட்சிணேசுவர நாட்களில் என்மனம் எப்படி இருந்தது! யாரோ புல்லாங்குழல் வாசிப்பார்கள். இறைவனே புல்லாங்குல் வாசிப்பதாக எனக்கு தோன்றும்.உடனே கடவுளை காணவேண்டும் என்ற வேட்கை எழும்.அப்படியே நான் சமாதியில் ஆழ்ந்துவிடுவேன். காவி உடை தரித்திருந்த ஒருவரைப்பார்த்து அனை்னை கூறினார் – இப்படி செய்யாதீர்கள்.முதலில் உண்மைப்பொருளின் அனுபூதி பெறுங்கள். பின்பு காவி உடை அணிந்து மக்களிடம் செல்லலாம் .உங்கள் கால்களில் தலைவைத்து மக்கள் வணங்குவார்கள்.அதை ஏற்றுக்கொள்ளும் ஆற்றல் இல்லாவிட்டால் வீழ்ச்சி ஏற்படும்.

பணம் இருப்பவன் கொடுப்பதன்மூலம் சேவை செய்யட்டும்.அது இல்லாதவன் ஜபதபங்களின் மூலம் சேவை செய்யட்டும், அதுவும் முடியாவிட்டால் இறைவனை சரணடை என்பார் குருதேவர்.
என்னைக் காக்க ஒரு தாயோ தந்தையோ யாரோ ஒருவர் இருக்கிறார் என்ற எண்ணம் மனத்தில் இருந்தாலே போதும்.
மனத்தை நிலைநிறுத்தி ஒருமுறை இறைவனின் நாமம் சொல்லி அவரை அழைப்பது லட்சம்முறை ஜபம் செய்வதற்குச் சமம்.மனம் ஈடுபடாமல் நாள்முழுவதும் ஜபம் செய்து என்ன பயன்? – பிள்ளைகள் பிறப்பதே ஒரு பாவம்தான்.உலகமே ஒரு மாயாஜாலம்,ஆனால் இது மாயாஜாலம் என்பது மனிதனுக்குப் புரியவில்லை என்பதுதான் வருத்தத்திற்குரிய விஷயம் என்பார் குருதேவர்
– உலகியல் வாழ்க்கையில் ஏதாவது சுகம் இருக்கிறதா? இப்போது இருக்கிறது,மறு கணம் இல்லை.இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டுவிட்டவர்கள் என்ன செய்ய முடியும்? உண்மை புரிந்தாலும் அவர்களால் எதுவும் செய்ய முடியாது.
– மகளே (இளம் பக்தை) குடும்ப வாழ்க்கை அப்படி பெரிதாக உன்னை என்ன செய்துவிடும்.நீ இல்லறத்தில் வாழ்வதும் மரத்தடியில் வாழ்வதும் ஒன்றுதான்.குடும்ப வாழ்க்கை இறைவனிலிருந்து வேறுபட்டதா? எல்லாவற்றிலும் அவரே இருக்கிறார். நீ ஒரு பெண்.நீ எங்கே போக முடியும்? வீட்டை துறந்து சென்றால் பல்வேறு விபரீதங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
– அவர் எங்கே எப்படி வைக்கிறாரோ அங்கேயே மகிழ்ச்சியுடன் வாழ்.இறைவனைநாட வேண்டும். அவரைப்பெற வேண்டும்-இதுவே லட்சியம். அவரிடம் நீ பிரார்த்தனை செய்வாயானால் உன் கையைப்பிடித்து அவரே அழைத்து செல்வார்.அவரைச் சரணடைந்து உன்னால் வாழ முடியுமானால் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை.
– குருவும் சீடனும் சேர்ந்து வாழ்வது நல்லதல்ல.ஏனென்றால் அன்றாட சாதாரண வாழ்க்கையை காண்கின்ற சீடன் அவரை சாதாரண மனிதனாக கருதக்கூடும்.அது சீடனுக்கு பாதகமாக அமையும்.ஆகவே சீடன் குருவிலிருந்து சற்று விலகி வாழ்ந்து அவ்வப்போது அவரை சந்திப்பது நல்லது.அதேவேளைில் சீடன் குருவை அவ்வப்போது சந்திக்காமலும் இருக்க்ககூடாது.
– மகளே! நானும் என் வாழ்நாள் முழுவதும் ஆன்மீகத்தில்தான் இருக்கிறேன். நீ வயதில் மிகவும் இளையவள்.ஆன்மீகத்தை நாடி இங்குமங்கும் அலைவது உனக்கு ஆபத்தாகவே முடியும்.நான் சொல்வதை கேள்.நீ எந்த நிலையில் வாழ்ந்தாலும் உலகின் கறை உன்னை படியாது..குருதேவர் இருக்கிறார் எதற்கும் பயப்படாதே.எதற்கும் கலங்காதே
– உங்கள் உடம்பு என்பது வேறென்ன மகளே, அதுவும் என் உடம்பே அல்லவா! உங்கள் உடம்பு நல்ல நிலையில் இல்லாவிட்டால் நானும் கஷ்டப்படத்தானே வேண்டும்
– சாதனை வாழ்வில் பெரும்பாலான தடைகள் அகத்திலிருந்தே வருகின்றன.புறத்தடைகள் குறைவே.ஆனால் தடைகள் எவையானாலும் ஜபம் செய்யச்செய்ய.தியானமும் தாரணையும் பழகப்பழக அவை ஒவ்வொன்றாக விலகிவிடும்

Previous Storyபணக் கஷ்டத்தை விரட்டும் அஷ்டமங்கல ஸ்லோக வழிபாடு
Next Storyவரலக்ஷ்மி விரதம், மஹாலக்ஷ்மி வழிபாடு பற்றிய 100 தகவல்கள்!

SEARCH

CATEGORIES

  • Festivals
  • General info whatsapp
  • Manimaadam
  • Temple info whatsapp
  • Viratham info
  • இன்றைய ராசிப்பலன்

LATEST POSTS

  • flowers
    அர்ச்சனைப் பூக்களின் பலன்கள்
  • sivan-1
    சிவ பூஜையில் கரடி என்றால்?
  • kula_deivam
    குடும்ப பிரச்சனை தீர குலதெய்வ வழிபாடு..!
  • hqdefault
    ஏன் ? எதற்கு? எப்படி?
  • god
    கடவுளிடம் யாரால் நெருங்கமுடியும்? கடவுள் யாரிடம் நெருங்குவார்?

Astrology

Free Kundli Software
Powered by Astro-Vision

மேலும் படிக்க

  • 1522218653-6734
    பங்குனி உத்திரம் பற்றிய சிறப்பான 35 தகவல்கள்
  • DGWeB94UQAA1EWu
    வரலக்ஷ்மி விரதம், மஹாலக்ஷ்மி வழிபாடு பற்றிய 100 தகவல்கள்!
  • festivals
    Tamil Festivals List 2019
  • sivan-5
    பிரதோஷம்2019

Why Pariharam?

It is very well understood that all the problems we face today are due to the Karma of our current or the previous births. So we have to be very careful that we don’t add up to our bad karmas in the current birth to wander again to parihara sthalams in the next birth

Our Sites

  • Pariharam.info
  • Medicine.Pariharam.info
  • Lord Karuppu

Blog Categories

  • Festivals (4)
  • General info whatsapp (65)
  • Manimaadam (1)
  • Temple info whatsapp (56)
  • Viratham info (3)
  • இன்றைய ராசிப்பலன் (3)

DEVELOPED BY Shanmugar Web Solutions.