வீட்டு மோட்டில், சிறிய துவாரம். அதன் வழியாக சூரிய ஔியின் கீற்று உள்ளே நுழைந்து தரையில் நாலனா வட்ட ஔியை பதித்திருக்கிறது. நீங்கள், அந்த கீற்று,உங்கள் கண்ணில் படும் வண்ணம் அது வந்த வழியே அன்னார்ந்து பாருங்கள்! முழுச் சூரியன் பளிச்சென தெரியும். கண்களை மூடிக் கொள்வீர்கள். அந்த நிலையிலேயே, யாரையாவது உங்கள் வீட்டு வாசலில் விழும் சூரிய ஔியை ஒரு சிறிய கண்ணாடியில் உங்கள் கண்களை நோக்கி பிரதிபலிக்கச் சொல்லுங்கள். அப்படிப் பிரதிபலிப்பதிலும் அதே முழுச் சூரியனையும் பார்க்கலாம். மீண்டும் தலை தூக்கி மோட்டு ஓட்டை வழியாகப் பாருங்கள். அதே சூரியன். இப்படியாக மாறி மாறி இரண்டு திக்கிலும் பார்க்கும் போது அதே சூரியனை ஆனால் இரண்டாக தனித்தனியே பார்க்கிறீர்கள்.
விளக்கம் என்னவெனில், சூரியனிலிருந்து வரும் ஔித்துகள்களுக்கு photon என்று பெயர். இத்தகைய போட்டான்கள் பாலைவனத்தில் மணல் புயலின்போது மணல்கள் கும்பல் கும்பலாக வாரி வாரி வீசப்படுமே, அதே போல்தான்,இந்த போட்டான் மணல் துகள்கள் கும்பல் கும்பலாக சூரியனிலிருந்து தூக்கி எறியப்படுகின்றன. இந்த போட்டான் மணல் துகளைத்தான் நாம் ஔி என்கிறோம். இந்த போட்டான் துகள் சைசில் ஒரு எலக்டரான் வடிவை ஒத்திருக்கும்.
மோட்டு ஓட்டையிலிருந்தும், வாசல் கண்ணாடியிலிருந்தும் வந்த சூரிய ஔியில், தனித் தனியே இரண்டு முழு சூரியர்களைப் பார்த்தோம் அல்லவா, இப்போது உங்களால், சூரியனிலிருந்து வரும் ஒரு போட்டானை மாத்திரம் உங்கள் கண்களுக்கள் அனுமதிக்க முடிந்தால், ஆச்சரியப் பட்டுப் போவீர்கள், அப்போதும் அதே முழுச் சூரியன் அதே பிரகாசத்துடன் உங்கள் கண்களைக் கூசச் செய்து விடும். இங்ஙனம் ஒவ்வொரு போட்டானும் ஒவ்வொரு முழுச் சூரியர்கள்தான் என்று அறியலாம்.
ஆன்மாவும் சூரிய ஔிபோல் எங்கும் பரவி இருந்தாலும், அதன் ஒவ்வொரு புள்ளியும், முழு ஆன்மாவினை தன்னில் கொண்டிருக்கும். முழுமை, பரிபூரணம் என்பதன் இலக்கணம் என்ன தெரியுமா? அது, முழுமையிலிருந்து ஒரு புள்ளியைப் பிரித்தபோதும், ‘பிரிக்கப்பட்ட முழுமையும், பிரிந்த புள்ளியும்’ முழுமையே ஆகும்” என்பதே! இங்ஙனமாக, பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுத் துகளும் முழுமையாக ஆன்ம பிரசன்னத்தில் இருப்பதை நாம் அறிய வரலாம்! இப்படியாக, ஆன்மா பிரிவுபடாத முழு ஆன்மாவாகவும் அதே நேரம் ஒவ்வொரு அணுத்துகள்களிலும் அதே முழுமையுடன் அதே ஆன்மாவாகவே இலங்குகிறது.
எப்படி மோட்டின் ஓட்டையிலும், கண்ணாடியிலும் முழு முழு சூரியர்கள் தனித் தனியாகவும், அது போக தனியான ஒரே சூரியனாகவும் ஒரே சமயத்தில் விளங்குகிறதோ, அதே போல்தான் ஆன்மாவினது நிலையும். கோடி டிவிக்கள் கீழே இருந்தாலும், அக்கோடி டிவிக்களிலும் கோடி முழுமையான விஜய் டிவி சேனலை முழுமையாக பார்க்க முடிகிறதல்லவா? விஜய் டிவி சேனல் ஒன்றே ஒன்றுதான் சேட்டிலைட்டிலிருந்து கீழே இறங்கி வருகிறது என்பதை மறக்கலாகாது! முடிவாக, ஆன்மா ஒன்று. அது பலவாக, எவ்வளவு பொருண்மை பிரபஞ்சத்தில் உண்டோ அவ்வளவாகவும் விளங்குகிறது!