விதர்ப_நாட்டின் மன்னன் விஜரவதன் தவவாய் தவமிருந்து பெற்ற மகள் ரேணுகா தேவி. அவ்வாறு தவமிருந்து பெற்ற புதல்வியை சீரும் சிறப்புமாக வளர்த்து வருகையில் சப்தரிஷிகளுள் ஒருவரான ஜமதக்னி முனிவர் விஜரவத மன்னனிடம் அவர் மகளை மணமுடித்து தருமாறு கேட்டார்! சகல செளபாக்கியத்துடன் ஓவியமாக வளர்த்த பெண்ணை ரிஷி ஒருவருக்கு மணமுடிப்பதா என்று மனத்துக்குள் விஜரவதன் நினைத்தாலும், ஜமதக்னி முனிவரின் கோபம் பிரசித்தி பெற்ற ஒன்றாததால் அவர் சாபத்துக்கு ஆளாவதை விட மகளை மணமுடித்துத் தருவதே சாலச் சிறந்தது […]
நவ கைலாய தலங்கள்
அகத்தியரின் சீடரான உரோமச முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்யவும், அதற்கான இடங்களை தேர்ந்தெடுத்து தருமாறும் குருவிடம் கேட்டார். சிவனுக்கு பூஜை செய்த தாமரைமலர்களை தாமிரபரணியில் வீசும்படியும், அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் லிங்க பிரதிஷ்டை செய்யும்படியும் அகத்தியர் கூறினார். அதன்படி உரோமசர் தாமரை மலர்களை நீரில் விட, 9 பூக்கள் பல இடங்களில் கரை ஒதுங்கின. இந்த இடங்களில் எல்லாம் சிவலிங்க பிரதிஷ்டை செய்தார் உரோமசர். இவை “நவ கைலாய […]
முருகனின் 16வகை கோலங்கள்
ஞானசக்திதரர் : இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும் மூலவர் திருவடிவம் ‘ஞானசக்திதரர்’ திருக்கோலமாகும். கந்தசாமி : இவரை வழிபட்டால் சகல காரியங்களும் சித்தியாகும். பழனிமலை ஆண்டவர் திருவடிவம் இது. ஆறுமுக தேவசேனாபதி : இவரை வழிபட்டால் மங்களகரமான வாழ்வு கிடைக்கும். சென்னிமலை யாண்டவர் திருக்கோயிலில் கர்ப்பக்கிரக மாடம் ஒன்றில் இந்த திருவுருவம் உள்ளது. சுப்பிரமணியர் : இவர் தன்னை வழிபடும் பக்தர்களின் வினைகளை நீக்கி ஆனந்தப் பேற்றினை அளிக்கக் கூடியவர். […]
வெள்ளிங்கிரிஆண்டவர் திருக்கோயில்
தலவரலாறு கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியான வெள்ளியங்கிரி மலைகளின் ஏழாவது மலையில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 6000 அடி உயரத்தில் அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் சுயம்புவாய் எழுந்தருளி இருக்கின்றார். இம்மலை ஏழு சிகரங்களைக் கொண்டுள்ளது. ஐந்தரை கிலோ மீட்டர் தூரம் செல்லும் இப்பாதையில் வெள்ளை விநாயகர்கோயில் பாம்பாட்டி சுனை கைதட்டி சுனை சீதைவனம் அர்ச்சுனன்வில் பீமன்களி உருண்டை ஆண்டிசுனை போன்ற இடங்களை கண்டு மகிழ்ந்து செல்லலாம். தென்னகத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த புண்ணியத் […]
பெரிய சிவாலயங்களில் ஐந்து வகையான நந்திகள்
இந்திர நந்தி, வேத நந்தி (பிரம்ம நந்தி), ஆத்ம நந்தி (கொடி மரத்தின் அருகில் உள்ளது), மால்விடை (மகாமண்டபத்தில் இருப்பது), தரும நந்தி என்பவையாகும் இந்திர நந்தி : ஒரு சமயம் இந்திரன் இடப (காளை) வடிவம் கொண்டு சிவபெருமானைத் தாங்கினான். போகங்களின் அதிபதியாகிய, இந்திரன் வடிவாக விளங்கும் இந்த ‘நந்தியைப் போகநந்தி” என்றும், ‘இந்திர நந்தி” என்றும் அழைக்கின்றனர். இந்த நந்தியைக் கோயிலுக்கு வெளியே சற்று தொலைவில் கருவறையை நோக்கியவாறு அமைக்கின்றனர். வேத நந்தி : […]
நீலமேகப் பெருமாள் (மாமணி) திருக்கோவில், தஞ்சாவூர்
மூலவர் – நீலமேகர், வீரநரசிம்மர், மணிக்குன்றர் உற்சவர் – நாராயணர் தாயார் – செங்கமலவல்லி, தஞ்சைநாயகி, அம்புஜவல்லி தல விருக்ஷம் – மகிழம் புராணப் பெயர் – தஞ்சமாபுரி, வெண்ணாற்றங்கரை மங்களாசாசனம் – பூதத்தாழ்வார், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார் சிறப்பு – திவ்ய தேசங்களுள் ஒன்று. சோழர்களால் கட்டப்பட்டது. இறைவன் அமர்ந்தகோலம். பஞ்ச நரசிம்மர்கள்:சிங்கப் பெருமாள் கோவிலில் வீரநரசிம்மர்; முன் மண்டபத்தில் யோக நரசிம்மர்; நீலமேகப் பெருமாள் கோவில் பிரகாரத்தில் லக்ஷ்மி நரசிம்மர்; கருடாழ்வார் விமானத்தில் அபயவரத […]