Simple Pariharam Information
  • HOME
  • ABOUT US
  • BLOG
    • MANIMAADAM
  • CATEGORIES
    • Festivals
    • Temple Information
    • Manimaadam
    • General Information
    • இன்றைய ராசிப்பலன்
    • Viratham Information
  • WALLPAPER
  • GALLERY
  • CONTACT
  • HOME
  • ABOUT US
  • BLOG
    • MANIMAADAM
  • CATEGORIES
    • Festivals
    • Temple Information
    • Manimaadam
    • General Information
    • இன்றைய ராசிப்பலன்
    • Viratham Information
  • WALLPAPER
  • GALLERY
  • CONTACT

பூர்வ ஜென்ம பாவங்களை பூரணமாக கரைக்க – ஒரு அதி அற்புத பரிகார ஸ்தலம் விஜயாபதி

நாம் செய்யும் செயல்களால், எப்பொழுதும் நம்மை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதில்லை. நாம் செய்த நற்செயல்கள் அதற்குரிய விளைவையும், பயனையும் நிச்சயம் தரக்கூடியவைகள். 

பொறுத்திரு பொல்லாங்கு மனமே பூர்வ ஜென்ம பாவங்களை பூரணமாக கரைக்க – ஒரு அதி அற்புத பரிகார ஸ்தலம் விஜயாபதி!!!
ராஜரிஷி விசுவாமித்திரர் சந்நிதி விஜயாபதி
திலா ஹோமம் , ராமேஸ்வரத்தில் செய்வதைக் காட்டிலும், பல மடங்கு பயனுள்ள , உங்களின் பூர்வ ஜென்ம பாவங்களை பூரணமாக கரைக்க – ஒரு அதி அற்புத பரிகார ஸ்தலம் – இந்த விஜயாபதி. ப்ரம்ம ரிஷி , ராஜ ரிஷியான விஸ்வாமித்ர மகரிஷி – நெடு நாட்கள் தங்கியிருந்த ஸ்தலம்.

இந்த பித்ரு தோஷம் நாம் சேர்க்கும் எந்த ஒரு புண்ணிய காரியத்தையும் நம்மிடம் சேர்க்காமல் தடுக்கும் சக்தி வாய்ந்தது; எனவே, பிதுர் தோஷம் நீக்கிட நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம் அருகில் இருக்கும் விஜயாபதி என்னும் கடலோர கிராமத்தில் இருக்கும் ஸ்ரீவிஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி திருக்கோவிலில் நவகலசயாகம் செய்ய வேண்டும். ஆன்மீக ஆராய்ச்சியாளர் மிஸ்டிக் செல்வம் ஐயா கூறுவது
ஸ்ரீவிஸ்வாமித்ரமஹாலிங்கசுவாமி திருக்கோவில் . 17,50,000 ஆண்டுகளுக்கு முன்பாக,விஸ்வாமித்ர மகரிஷி அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட சிவாலயம் இது.சில நூறாண்டுகளுக்கு முன்பு,விஜயாபதி ஒரு மாபெரும் துறைமுக நகரமாக இருந்திருக்கிறது .இந்த விஸ்வாமித்ரர் மஹாலிங்க சுவாமி திருக்கோவிலில் மூலவராகிய ஸ்ரீ விஸ்வாமித்ர மஹாலிங்க சுவாமி சன்னதிக்குப் பின்புறம் இந்த சித்தரின் ஜீவ சமாதி அமைந்திருக்கிறது .
எத்தனையோ பரிகாரங்கள் செய்தும், கடும் தோஷத்தால் அவதிப்படும் ஆத்மாக்களுக்கு – ஒரு மாபெரும் வரப் பிரசாதம் விஜயாபதி. இங்கு வந்து நவகலச யாகம் செய்த பலருக்கு , பூர்வ ஜென்ம ஞாபகங்கள் வருகிறதாம்.

நவகலச யாகம் செய்பவர்களுக்கு 64 வகையான தோஷங்கள் நிவர்த்தி ஆகின்றன.நீங்கள் ஜாதகம் பார்க்கும் நபர்களுக்கு , கீழே குறிப்பிடும் அறிகுறிகள் , அமைப்பு இருந்தால் – நீங்கள் தாரளமாக பரிந்துரை செய்யலாம்.

இராமாயணகாலத்தில் தாடகையை கொன்றதாலும்,அதன்பிறகு சிறந்த சிவபக்தன் இராவணனை வதம் செய்ததாலும் ஏற்பட்ட பிரம்ம ஹத்தி தோஷம்,தந்தை தசரதனின் பேச்சை மீறி வந்ததால் ஏற்பட்ட பிதுர் தோஷம் போன்றவை நீங்கிட, விஸ்வாமித்ர மகரிஷியால் முதன்முதலில் தில்லைவன காளியம்மாள் குடியிருக்கும் விஜயாபதியில் நவகலசயாகம் ஸ்ரீஇராமபிரானுக்கு செய்யப்பட்டது.
விஸ்வாமித்ர மகரிஷி இராம லட்சுமணன்களை அழைத்துச் சென்று,தில்லை வனக்காட்டில் ஒரு யாகம் நடத்தினார்.அப்போது, அந்த யாகத்தைக் கெடுப்பதற்காக தாடகை என்னும் அரக்கி வந்தாள்.அவளை, விஸ்வாமித்ர மகரிஷியின் உத்தரவுப்படி ஸ்ரீஇராமபிரானும்,ஸ்ரீலட்சுமணபிரானும் கொன்றார்கள்.அப்படி கொன்றதால்,இருவருக்கும் பிரம்மஹத்தி தோஷம் உண்டானது. அந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கிட,நவகலசயாகம் செய்த இடமே விஜயாபதி ஆகும்.விஜயாபதி இன்று விஜயாபதி மேலூர்,விஜயாபதி கீழுர் என இரண்டு கிராமங்களாக இருக்கின்றன.300 ஆண்டுகளுக்கு முன்பு விஜயாபதி ஒரு மாபெரும் நகரமாக இருந்தது.விஜயாபதி துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு கடல்வாணிகம் செய்திருக்கின்றனர்.
ஆக,இந்த கோவிலும் கிராமமும் யுகங்களைத் தாண்டி இருக்கின்றன. .
இங்கே,நவகலச யாகம் செய்ய மதியம் 12 மணிக்குள் வந்துவிடவேண்டும். இறங்குபொழுது எனப்படும் மதியம் 12 மணிக்குப் பிறகு நவகலச யாகம் செய்வதால்,நமது அனைத்து தோஷங்களும் நாசமடைந்துவிடும்.
ஒன்பது கலசங்களில் ஒன்பதுவிதமான திரவப்பொருட்களை நிரப்பி, நவக்கிரகங்களை ஆவாஹனம் செய்து, மந்திரங்களை ஓதி, இங்கிருக்கும் வில்வ மரத்தடியில் இந்த ஒன்பது கலச நீர்களும் உரிய ஜாதகரின் தலையில் ஊற்றுவார்கள்.அதன் பிறகு,அந்த ஈர ஆடையோடு, ஒரு பர்லாங்கு தூரத்தில் இருக்கும் கடலுக்குச் சென்று கடலில் நீராட வேண்டும். நீராடிய பின்னர், கடற்கரை மணலில் நெற்றி கடற்கரையில் படுமாறு இடது பக்கம் மூன்று முறையும்,வலது பக்கம் மூன்று முறையும் (மனதுக்குள் ஓம்சிவசிவஓம் என ஜபித்தவாறே) உருள வேண்டும்.அதன் பிறகு,மீண்டும் கடலில் சென்று நீராட வேண்டும்.இப்படி மூன்று முறை செய்ய வேண்டும்.இப்படிச் செய்த பின்னர்,கோவில் பூசாரி ஒரு எலுமிச்சை பழத்தினால் நம்மை திருஷ்டி சுற்றிவிட்டு,அந்த எலுமிச்சையை கடலுக்குள் எறிந்துவிடுவார்.நாம் அணிந்திருந்த ஆடையை கழற்றி,(வேறு ஆடை அணிந்துவிட்டு) அதை கடலில் எறிந்துவிடவேண்டும்.
உடனே,கடற்கரையிலிருந்து அரை பர்லாங்கு தூரத்தில் இருக்கும் தில்லைவனக் காளியம்மன் கோவில் வரை திரும்பிப் பார்க்காமல் வந்தடையவேண்டும்.
தில்லை வனகாளிக்கு பூஜை செய்து இனிப்புகள்,எள் பதார்த்தம்,பழங்களை அங்கிருப்பவர்களிடம் விநியோகிக்க வேண்டும்.நவகலச யாகம் முற்றுப்பெறும்.உடனே, வேறு எந்த கோவிலுக்கும்,யாருடைய வீட்டுக்கும் செல்லாமல் நேராக நம்முடைய வீட்டுக்குச் செல்ல வேண்டும்.இப்படிச் செய்வதால்,நமது 64 விதமான தோஷங்கள் நீங்கிவிடும்.இந்த தோஷங்களில் பிரேத சாபம்,நவக்கிரக சாபம்,குரு சாபம்,குல தெய்வ சாபம் நீங்கும்.

விஜயாபதி நெல்லை குமரி நெடுஞ்சாலையில் வள்ளியூரிலிருந்து பிரிந்து ராதாபுரம் என்னும் ஊருக்குச் சென்று அங்கிருந்து 10 கிலோ மீட்டர்கள் தூரத்தில் கடலோரமாக அமைந்திருக்கும் கிராமம் ஆகும். கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிப்பதாக சொல்லுவார்கள்.அது ஒரளவே உண்மை.நிஜத்தில் இந்த விஜயாபதியில் தான் முக்கடலும் (வங்காள விரிகுடா, இந்து மகா சமுத்திரம்,அரபிக்கடல்) சங்கமிக்கிறது. இந்த நவகலச யாகம் செய்ய விரும்புவோர்.
இங்கே விஸ்வாமித்ர மகரிஷியால் ஹோமகுண்ட கணபதி கோயிலும்,அதையொட்டி விஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி திருக்கோவிலும் உருவாக்கப்பட்டது.இன்றும் சூட்சுமமாக விஸ்வாமித்ர மகரிஷி இங்கு வாழ்ந்து வருகிறார்.விஸ்வாமித்ர மகரிஷி அவர்கள் யாகம் செய்த இடமே படத்தில் நீங்கள் காண்பது!!! இந்த இடத்தோடு சேர்ந்து ஒரு சிறிய கிணறு இருக்கிறது.இந்தக் கிணற்றைத் தோண்டிப் பார்த்ததில், சாம்பல் நிறைய கிடைத்திருக்கிறது.இந்த சாம்பலை மேல்நாட்டைச் சேர்ந்த சிலரும் வந்து எடுத்துப்போய்,ஆராய்ச்சி செய்து பார்த்ததில், சாம்பலின் வயது 17,50,000 ஆண்டுகள் என தெரிந்துள்ளது.எனவே,இராமாயணம் நிஜம் என்பதற்கு இந்த விஜயாபதி விஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி கோவிலும் ஒரு ஆதாரம் ஆகும்.

இங்கிருந்து வெறும் ஐந்து கிலோமீட்டர்கள் தூரத்தில் கடலோரமாக அமைப்பட்டிருப்பதுதான் கூடங்குளம் அணுமின் நிலையம்!


ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ!!
ஓம் விஸ்வாமித்ர மகரிஷியே போற்றி! போற்றி!! போற்றி!!!

Share this:

  • Tweet

Related

Previous Storyபுருவ மத்தி என்பது எது
Next Storyபணக் கஷ்டத்தை விரட்டும் அஷ்டமங்கல ஸ்லோக வழிபாடு

Leave a Reply Cancel reply

SEARCH

CATEGORIES

  • Festivals
  • General info whatsapp
  • Manimaadam
  • Temple info whatsapp
  • Viratham info
  • இன்றைய ராசிப்பலன்

LATEST POSTS

  • renuka_maa
    மாறு(தலை)பெற்ற ரேணுகாதேவி
  • A Power Circle Around us
  • guru-qulities-in veda
    Who is Guru?
  • 1522218653-6734
    பங்குனி உத்திரம் பற்றிய சிறப்பான 35 தகவல்கள்
  • cxs
    காயத்ரி மந்திரம் ஜெபிக்கும் முறை

Astrology

Free Kundli Software
Powered by Astro-Vision

மேலும் படிக்க

  • 1522218653-6734
    பங்குனி உத்திரம் பற்றிய சிறப்பான 35 தகவல்கள்
  • DGWeB94UQAA1EWu
    வரலக்ஷ்மிவிரதம்( 09.08.2019 ) முன்னிட்டு மஹாலக்ஷ்மி வழிபாடு பற்றிய 100 தகவல்கள்!
  • festivals
    Tamil Festivals List 2019
  • sivan-5
    பிரதோஷம்2019

Site Links

  • About us
  • Blog
  • contact
  • Gallery
  • Home
  • Manimaadam
  • shop
  • Vinayagar Agaval

Our Sites

  • Pariharam.info
  • Medicine.Pariharam.info
  • Lord Karuppu

Blog Categories

  • Festivals (4)
  • General info whatsapp (51)
  • Manimaadam (1)
  • Temple info whatsapp (53)
  • Viratham info (3)
  • இன்றைய ராசிப்பலன் (3)

DEVELOPED BY Shanmugar Web Solutions.